×

திருத்தணி கோயிலில் 14 நாட்களில் ₹75.48 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி, ஏப்.28; திருத்தணி முருகன் கோயில் உண்டியலில், 14 நாட்களில், பக்தர்கள் ₹75.48 லட்சம் ரொக்கம் மற்றும் 825 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மலைக்கோயிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 14 நாள்களில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கைகள், கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் ஞானசேகர், திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டன. அப்போது, ₹75 லட்சத்து, 48 ஆயிரத்து, 256ரூபாய் ரொக்கம், 825 கிராம் தங்கம், 5150 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பொன்னேரி அரசு கல்லூரி அருகே ஜம்பு சர்க்கஸ் தொடக்கம்