×

அமமுக பிரமுகரின் கார் டிரைவர் மண்டை உடைப்பு

பாகூர், ஏப். 28: பீர்பாட்டிலால் தாக்கி கார் டிரைவர் மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் புதுவை மாநில அமமுக செயலாளர் வேல்முருகனுக்கு கார் டிரைவராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் பெட்ரோல் பங்க்கில் ராஜா நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த பாலச்சந்தர், ராஜாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரது கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து ராஜா தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் ராஜாவின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அவர் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ராஜாவின் தந்தை லட்சுமணன் (66) பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய பாலச்சந்தரை தேடி வருகின்றனர். பாலச்சந்தர் மீது பாகூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : car driver ,
× RELATED தொடர் பைக் திருட்டு: கார் டிரைவர் கைது