×

அரியலூர் மாவட்ட தலைநகரில் மழையளவு கருவி அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

அரியலூர், ஏப். 26: அரியலூர் மாவட்ட தலைநகரில் மழையளவு கருவி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.அரியலூர் கலெக்டரிடம் மாவட்ட வளர்ச்சிக்குழு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு அதிகமாக வருமானம் அளிக்க கூடிய மாவட்டமாக அரியலூர் திகழ்கிறது.

அப்படியிருந்தும் அரியலூர் மாவட்ட தலைநகரில் எந்தவித அடிப்பட வசதிகளும் செய்ய மத்திய, மாநில அரசுகள் செய்ய முன்வரவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையளவு மற்றும் வெயில் அளவு கோள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எத்தனை சென்டி மீட்டர் மழை பொழிந்தது என்று அறித்து கொள்ள முடியும்.அதுபோல் வெயில் அளவும் தெரிந்து கொள்ள முடியும். எனவே மழையளவு, வெயில் அளவு கருவிகளை உடனடியாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : rainwater harvesting facility ,Ariyalur ,Collector Office ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...