×

எட்டியாம்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

பென்னாகரம், ஏப்.26: எட்டியாம்பட்டி ஏரியில் படர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றி, நீராதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பென்னாகரம் பேரூராட்சியில், 10 ஏக்கர் பரப்பளவில் எட்டியாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் தண்ணீரை, எட்டியாம்பட்டி, கள்ளிபுரம், கோடியூர், நூலஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். மேலும், 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியால், எட்டியாம்பட்டி ஏரி தண்ணீரின்றி வறண்டு விட்டது. தற்போது ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் படர்ந்து காணப்படுகிறது. கோடை மழை பெய்து வரும் நிலையில், சீமை கருவேல மரங்களால், தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதோடு, நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரி நீராதாரத்தை காக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ettiyambatte lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா