×

போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் குண்டம் இறங்கினர்

பொள்ளாச்சி, ஏப்.25:  பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.   பொள்ளாச்சி அருகே போடிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டும்ேதாறும் சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டில், திருவிழாவுக்காக கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் விழா துவங்கியது. பின் 12ம் தேதி முதல், பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பூவோடு எடுத்துவரும்  நிகழ்ச்சி துவங்கியது.  இந்த பூவோடு நிகழ்ச்சி தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. இதையடுத்து 21ம் தேதி மீன்குளத்தி பகவதியம்மன், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன்கோயில், கன்னியாகுமாரி பகவதியம்மன், மலைகோட்டை, அவிநாசி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்தனர்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் குண்டம் திறப்பும், இரவு 9 மணிக்கு சிங்கவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின் இரவு 10.30 மணியளவில் குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டன. அந்நேரத்தில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான நேற்று காலை சுமார் 8 மணியளவில், பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடந்தது. நாளை 26ம் தேதி மஞ்சள் நீராட்டுளுடன் விழா நிறைவடைகிறது என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.

Tags : temple festival devotees ,Podipalayam Bhadrakaliyamman ,
× RELATED சேரம்பாடி வனச்சரகத்தில் யானை கணக்கெடுப்பு பணி துவக்கம்