×

செம்பியன் மாதேவியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் வரலாறு மீட்புக் குழு கோரிக்கை

அரியலூர், ஏப்.25: சோழப்பேரரசி செம்பியன்மாதேவியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று வரலாற்று மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியாரின் 1109 வதுபிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி செம்பியன் மாதேவி அரங்க மேடையில் ஆடல் வல்லான் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் கேட்டை நட்சத்திரத்தன்று செம்பியன் மாதேவியார் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்றும், அவர் ஆற்றிய அளப்பரிய சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று வரலாறு மீட்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் இது குறித்து கூறுகையில், ஆறு பேரரசர்களை உருவாக்கிய செம்பியன் மாதேவியார் அரசு விழா எடுக்க தகுதியானவரே என்பதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புலவர் கலைமாமணி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஏற்பாட்டினை வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் செம்பியன் மாதேவி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தினர். வரலாறு மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முகசுந்தரம், திரைப்பட உதவி இயக்குனர் மனோ குமரன், திருமுறை ஓதி தேவாரம் பாடி சுப்பையா பிள்ளை, சடையப்பிள்ளை, சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : History Rescue Committee ,birthday celebrations ,celebration ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்