×

புளுதியூர் சந்தையில் ₹24 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், ஏப்.25: அரூர் அருகே புளுதியூர் சந்தையில், ₹24 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், நேற்று கால்நடை சந்தை கூடியது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், சுமார் 180க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.  சந்தைக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் நேற்று ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் ₹24 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் இறைச்சி மாடு ₹23,500 முதல் ₹46,000 வரை விலை போனது. அதே போல் 10 கிலோ எடை கொண்ட ஆடு ₹3500 முதல் ₹6,900 வரை விற்பனையானது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா