×

பொம்மிடியில் உணவு தேடி ஊருக்குள் வந்த மான் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.25: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவைச் சுற்றி மலைகள் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான், காட்டுபன்றி, காட்டெருமை குரங்குகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வயல் வெளிக்கு வருகின்றன. அதே போல் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி வனப்பகுதியில் இருந்து, உணவு தேடி மான் ஒன்று பொம்மிடியில் கிராமப்பகுதிக்கு வந்தது. அப்போது நாய்கள் அந்த மானை துரத்தின. இதில் பயந்த மான் அங்குள்ள தியேட்டரில் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு, மானை பிடித்து வைத்து மொரப்பூர் வனத்துறையிரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.

Tags : Deer ,
× RELATED திருமங்கலம் அருகே பரிதாபம் வாகனங்களில் சிக்கி புள்ளி மான்கள் பலி