×

பாப்பாரப்பட்டி பரம்வீர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

தர்மபுரி, ஏப்.24: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பரம்வீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 205 மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 23 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.  பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளியின் தலைவர் செல்வி தரன், தாளாளர் கணேஷ் தரன், செயலர் மீனாட்சி கணேஷ், இயங்குநர் திருநாவுக்கரசு, முதல்வர் வாசு மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி வாழ்த்தினர்.

Tags : Paparapatti Paramwee Matriculation School ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி