×

போதை ஊசி போட்டு 3 லட்சம் பறித்த விவகாரத்தில் திடீர் திருப்பம் நான் கேட்ட பெண்ணை பண்ணை வீட்டுக்கு ஏன் அழைத்துவரவில்லை என தகராறு: முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி(45). இவர் உளவுத்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராமிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கடந்த 28ம் டிஜிபி அலுவலகம் ெசன்ற என்னை, நண்பர் அஜய் விக்கி காரில் கடத்தி போதை ஊசி செலுத்தி ரூ.1 லட்சம் பணத்தை கூகுள் பே மூலம் கொள்ளையடித்து கொண்டதாக புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் படி, சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், குற்றவாளி அஜய் விக்கியுடன், உளவுத்துறை ஏட்டு ரவி சிரித்தபடி செல்வது பதிவாகி இருந்தது. மேலும், சோழிங்கநல்லூர் பண்ணை வீடு காட்சிகளும் காணப் பட்டது. கடத்தல் அறி குறியே தெரியவில்லை. இதனால், உளவு காவலர் ரவி மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்தது. எனினும் போலீசார் புகாரின் அடிப்படையில், காரின் உரிமையாளர் லோகேஷை ஓசூரில் கைது செய்தனர்.  தொடர்ந்து ஆந்திராவில் பதுங்கியிருந்த  அஜய் விக்கியை கைது செய்தனர். பின்னர் உளவுத்துறை தலைமை காவலர் ரவியை கடத்தியது குறித்து முக்கிய குற்றவாளி அஜய் விக்கி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:‘‘ ரவி சூளைமேடு பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அதன் மூலம் அஜய்விக்கி பழக்கமாகியுள்ளார். அஜய் விக்கி மீது சூளைமேடு காவல் நிலையத்தில் சிறு சிறு வழக்குகள் உள்ளது. இதனால் உளவுத்துறை காவலர், அஜய் விக்கிற்கு பல வகையில் உதவி செய்துள்ளார். அந்த உதவிக்கு அஜய் விக்கி உளவுத்துறை காவலர் ரவிக்கு தனது பெண் நண்பர்களை அறிமுகம் ெசய்து வைப்பார். இந்த வகையில் கடந்த 28ம் தேதி அஜய் விக்கியுடன் உளவுத்துறை காவலர் ரவி சென்றுள்ளார். ஆனால், அஜய் விக்கி செல்போனில் காட்டிய பெண் அன்று வரவில்லை. இதற்கு பதில் அஜய் விக்கி வேறு பெண்ணின் புகைப்படத்தை காட்டியுள்ளார். ஆனால் தனக்கு குறிப்பிட்ட பெண் தான் வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் உளவுத்துறை காவலருக்கும், அஜய் விக்கி மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. உடனே அஜய் விக்கி உளவுத்துறை காவலர் ரவிக்கு போதை ஊசி போட்டு அவரை மிரட்டி 28ம் தேதி இரவு ரூ.1 லட்சம் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். அதோடு இல்லாமல் அவரது செல்போனில் இருந்து கூகுல் பே மூலம் அஜய் விக்கி மற்றும் லோகேஷ், நரேஷ் ஆகியோர் வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சம் மாற்றியுள்ளனர். இதை வெளியில் சொன்னால் பல பெண்களுடன் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டு வேலையில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பிறகு மீண்டும் போதை ஊசி போட்டு அடையார் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த சம்பவத்தை அவர் வெளியில் சொல்ல மாட்டார் என்று நினைத்துள்ளனர். ஆனால் ரூ.3 லட்சம் என்பதால் அவர் போலீசில் புகார் அளித்துவிட்டார். இதனால் 29ம் தேதி இரவே 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். பின்னர் போலீசார் செல்போன் உதவியுடன் கைது செய்தனர்’’ என்றார்….

The post போதை ஊசி போட்டு 3 லட்சம் பறித்த விவகாரத்தில் திடீர் திருப்பம் நான் கேட்ட பெண்ணை பண்ணை வீட்டுக்கு ஏன் அழைத்துவரவில்லை என தகராறு: முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ravi ,Bhajanai Koil Street, Chulaimedu, Chennai ,Nungambakkam ,
× RELATED இது ஒரு Super Human படம்! - Vasanth Ravi Speech at Weapon Trailer Launch | Dinakaran News.