×

கும்பாபிஷேக விழாவில் மாஜி கவுன்சிலரிடம் 13 பவுன் நகை பறிப்பு

காரிமங்கலம், ஏப்.22: காரிமங்கலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மாஜி பெண் கவுன்சிலரிடம் 13.5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 17ம் தேதி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில், திமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் குப்புசாமியின் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான கண்ணகி கலந்து கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது கழுத்தில் இருந்த 13.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து, காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கண்ணகி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வனப்பகுதி தொட்டிகளில்

Tags : festival ,Kumbabhishekha ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...