×

பிளஸ்2 பொதுத்தேர்வில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

அரூர், ஏப்.22:பிளஸ்2 பொதுத்தேர்வில், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 100சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி ரட்சனா 600க்கு 570 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழ்-97, ஆங்கிலம்-87, இயற்பியல்- 93, வேதியியல்-99, உயிரியியல்- 96, கணிதம்-98 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் பிரமோத் 565 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் பெற்றுள்ளார். கவியரசன் 554 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், தேர்ச்சிக்கு காரணமான ஆசிரிய, ஆசிரியைகளையும், கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் மோகன்ராசு, பொருளாளர் வரதராஜன், பள்ளி தாளாளர் இளங்கோ, கல்லூரி தாளாளர் தீர்த்தகிரி, இயக்குனர்கள் சாமிகண்ணு, பரந்தாமன், ராமு, குமார், வெற்றிச்செல்வன், பள்ளி முதல்வர் விமல்ராஜ், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஷர்மிளாதேவி மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினர்.

Tags : Morpore ,Kongu Matriculation School ,Commonwealth ,
× RELATED மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோகம்