ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகம் அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.21: ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்லில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் மக்களவை தொகுதியில் 71 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலும் 18 தொகுதியில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவனாது. இது கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவாக பதிவானது.

இடைத்தேர்தல் நடந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குகளை விட ஒரு சில தொகுதிகளில் குறைவாக பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பதிவான வாக்குகளை கூடுதலாக பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சோளிங்கர் தொகுதியில் 81.69 சதவீதம் பதிவானது. இடைத்தேர்தலின்போது 82.26 சதவீதம் வாக்குபதிவாகி உள்ளது. ஆம்பூர் தொகுதியில் 2016ம் தேர்லின்போது 75.40 சதவீதமும், இடைத்தேர்தலில் 76.67 சதவீதம் பதிவாகி உள்ளது. குடியாத்தம் தொகுதியில் 2016ம் தேர்தலின்போது 74.01 சதவீதமும், இடைத்தேர்லில் 74.83 சதவீதமாக பதிவானது. இதில், சோளிங்கரில் 0.59 சதவீதமும், ஆம்பூரில் 1.27 சதவீதமும், குடியாத்தத்தில் 0.82 சதவீதமும் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளது’ என்றனர்.

Tags : Ampur ,constituencies ,Gudiyatham ,Sholingar ,
× RELATED 13 பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு:...