எனது வெற்றி உறுதி: மநீம வேட்பாளர் பேட்டி

புதுச்சேரி, ஏப். 19: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ்.சுப்ரமணியன், லாஸ்பேட்டை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிபெற்றால் புதுச்சேரியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரும். இதனால் புதுச்சேரி வளர்ச்சி தடைபடும். அதுபோல், என்ஆர் காங்., வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றால் அவர் இளைஞர், அனுபவம் இல்லாதவர் என்பதால் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை கொண்டுவர மாட்டார். ஆகையால் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத எனது வெற்றி உறுதி. எனது வெற்றிக்குப்பின் புதுச்சேரி வளர்ச்சி பெறுவதும் உறுதி என்றார்.

Related Stories: