×

திமுக கூட்டணிக்கே வெற்றி ராஜகண்ணப்பன் பேட்டி

சிவகங்கை, ஏப்.19: நாற்பதுக்கு நாற்பது என அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சிவகங்கையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம அவர் தெரிவித்ததாவது: கடந்த 20 நாட்களில் 40 மக்களவை தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். நாற்பதிற்கு, நாற்பது என்ற வீதத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும். மே 23ல் தேதி மக்கள் தீர்ப்பு வெளி வரும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். தற்போது வருமான வரித்துறை நடவடிக்கைகள் பாரபட்சமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை எந்த பணத்தையும் எடுக்கவில்லை. வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நடத்துகிறார். அவர் வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை. வருமான வரித்துறையினரை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாரபட்சமாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Rajagopanan ,interview ,alliance ,DMK ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி