×

தொப்பூர் கணவாய் பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் பரிதவிக்கும் குரங்குகள்

பென்னாகரம், ஏப்.18: தொப்பூர் கணவாய் பகுதியில், தண்ணீர் கிடைக்காததால் குரங்குகள் தவித்து வருகின்றன. பென்னாகரம் அருகே, ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகள் அதிகளவில் உள்ளது. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், போதிய உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல், வன விலங்குகள் கிராம பகுதிக்கு படையெடுத்து வருவது அதிகரித்துள்ளது. பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் கணவாய் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள், சாலையோரங்களில் வீசி செல்லும் தின் பண்டங்களை போட்டி போட்டு கொண்டு எடுத்து சாப்பிடுகின்றன. தொப்பூர் கணவாய் பகுதியில், குரங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள் மற்றும் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால், குரங்குகள் பெரிதும் தவித்து வருகின்றன. எனவே, தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Tappur Cuttack ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு