×

அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் பரவசம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் வீட்டடி மனை அனுமதி வழங்குவதில் தொடர் முறைகேடு நடவடிக்கை எடுக்கப்படுமா?

செம்பட்டி, ஏப். 18: ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் வீட்டடி அனுமதி வழங்குவதில் ெதாடர் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஆலமரத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், அண்ணாமலையார்மில்கேட், ரத்தினகிரி, சாந்திநகர், வரதராஜபுரம், தெற்குத்தோட்டம், போக்குவரத்து நகர் உட்பட 10 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பிரிக்கப்படும் வீட்டடி மனைகளுக்கு முறைகேடாக அனுமதிகள் வழங்குவதாகவும், தனிநபர் வீடு கட்டுவதற்கு அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர நான்கு வழிச்சாலையிலிருந்து என்.பஞ்சம்பட்டி பிரிவு செல்லும் சாலையில் ஆலமரத்துப்பட்டிக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட நகர்கள் உருவாகி வீட்டடி மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்நகர்களில் முறையாக ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய இடங்களை கொடுக்காமல் இருப்பதாகவும், பூங்கா மற்றும் வணிக வளாகத்திற்கு ஒதுக்காமல் உள்ள இடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.  இந்த முறைகேடுகளுக்கு ஆத்தூர் யூனியன் அலுவலக அதிகாரிகளே துணைபோவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தினால் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் தெரிய வரும் என முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

Tags : house ,devotees ,Amararattupatti Panchayat ,village ,Agnisati ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்