×

தார்பாய் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஏப்.18: தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் துரை(44). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவை கோரம்பள்ளத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி இருந்தார். அப்போது ஆட்டோவில் வைத்திருந்த 2 தார்பாய்களை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து துரை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தருவைகுளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(23) என்பவர் அந்த தார்பாயை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : Tharpai ,
× RELATED தார்பாய் விரித்தபோது லாரியில் இருந்து தவறிவிழுந்து டிரைவர் பலி