×

தூத்துக்குடி தொகுதியில் 2வது முறையாக வெற்றி கனிமொழி எம்பிக்கு ஊர்வசி அமிர்தராஜ் வாழ்த்து

ஏரல், ஜூன் 6: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி எம்பி, 5,40,729 வாக்குகள் பெற்று மீண்டும் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமாகா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். கனிமொழி எம்பியின் வெற்றியை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ், சென்னையில் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

The post தூத்துக்குடி தொகுதியில் 2வது முறையாக வெற்றி கனிமொழி எம்பிக்கு ஊர்வசி அமிர்தராஜ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Urvashi Amirtharaj ,Kanimozhi ,Thoothukudi Constituency ,Arel ,DMK ,India Alliance ,Thoothukudi ,AIADMK ,Tamaka ,Naam Tamilar Party ,MP Kanimozhi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் 2வது முறை...