×

கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இறுதி கட்ட வாக்குசேகரிப்பு

கரூர், ஏப்.17: கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை நேற்று கரூரில்இறுதிக்கட்டபிரசாரம்மேற்கொண்டார்.பிற்பகலில் வெங்கமேடு எம்ஜிஆர்சிலை, சர்ச்கார்னர், ஐந்துரோடு, பசுபதிபாளையம், ராமானூர், தெரசாநகர், சுங்ககேட், திருமாநிலையூர், லைட்ஹவுஸ், உழவர்சந்தை, சின்னஆண்டாங்கோயில், பெரியார்வளைவு, திருக்காம்புலியூர் பகுதியில் வாக்குசேகரித்து பிரசாரம்மேற்கொண்டார். இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்ஆர்,விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, முன்னாள் எம்எல்ஏ காமராஜ், நிர்வாகிகள்  உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான அதிமுகதொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Thambidurai ,constituency ,Karur Lok Sabha ,phase ,AIADMK ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...