×

ஆத்தூரில் ₹27 லட்சத்திற்கு பருத்தி ஏலம் குவிண்டாலுக்கு ₹200 சரிவு

ஆத்தூர், ஏப்.17: ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1600 மூட்டை பருத்தி ₹27 லட்சத்திற்கு விற்பனையானது. ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் ஆத்தூர். நாமக்கல், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் கோவை, ஈரோடு, சேலம், கும்பகோணம், புதுக்கோட்டை மற்றும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மில் உரிமையாளர்கள் உள்ளிட்ட 20 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் ஆர்சிஹெச் ரகம் குவிண்டால் ₹4800 முதல் ₹6259 வரையிலும், டிசிஹெச் ரகம் ₹6300 முதல் ₹7250 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆர்சிஹெச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ₹200 வரையிலும் விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆக மொத்தம் 1600 மூட்டை பருத்தி ₹27 லட்சத்திற்கு ஏலம் போனது.

Tags : Cuttack ,Audar ,
× RELATED இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு...