×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.17: பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதுப்பட்டியில் இருந்து பாப்பம்பாடி செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதுப்பட்டி காந்திநகர் பகுதியில் இருந்து பாப்பம்பாடி செல்லும்
பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு ேநரங்களில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் மக்கள் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல், மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Pappirippatti ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து