×

காரைக்குடி பள்ளி ஆண்டுவிழா

காரைக்குடி, ஏப்.17: காரைக்குடி ராஜவித்யவிகாஸ் சிபிஎஸ்இ பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி முதல்வர் ஆரோக்கிய தைனீஸ் சுகன்யா வரவேற்றார். பொருளாளர் ராமசுப்பிரமணியன், ஆலோசகர் பேராசிரியர் கலியமூர்த்தி, நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்விகுழும தலைவர் அய்யப்பன் பேசுகையில், குறைவான கல்வி கட்டணத்தில் மாணவர்களுக்கு ஒழுத்துடன் கூடிய கல்வி அளிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இப் பள்ளி துவங்கப்பட்டு செயல்படுகிறது. சிபிஎஸ்இ, மாண்டிசோரி கல்வி முறை போதிக்கப்படுகிறது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய இளம் விஞ்ஞானி பயிற்சி இணைப்பு பள்ளியாகவும், மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எஸ்எஸ்பிஎப் பதிவும் பெற்றுள்ளது. ஹிந்தி பிரச்சார சபா, பிரிட்டிஸ் கவுன்சில் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு துவங்கப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிப்படியாக துவங்கப்படும் என்றார். பேச்சாளர் தேவகோட்டை ராமனாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மதுரை நரிமேடு கே.வி பள்ளி முதல்வர் முருகன், ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா, சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் குமரப்பன் நன்றி கூறினார்.

Tags : Karaikudi ,school anniversary ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க