×

நீடாமங்கலத்தில் ஆசிரியர் மன்ற பாராட்டு விழா

நீடாமங்கலம், ஏப். 17: நீடாமங்கலத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, உறுப்பினர்களின் குழந்தைகள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்தவில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா ஒன்றிய தலைவர் தீனதயாளன் தலைமையில் நடந்தது. மாநில கொள்கை விளக்க செயலாளர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரி, மயில்வானன், கலைச்செல்வி, பொற்செல்வி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் இரவிகாசன் வரவேற்றார். ஒன்றிய துணைச்செயலாளர் சதீஷ்நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் சண்முக வடிவேல், மாவட்ட பொருளாளர் நடராஜன் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு  ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் விஜயகுமாரை வாழ்த்தி பேசினர்.  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறைக்கு சென்று வந்த அனைத்து சங்கங்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட மூத்தோர் அணி தெட்சிணாமூர்த்தி கொடி ஏற்றினார். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : Teacher Board Appreciation Festival ,
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...