×

நீடாமங்கலம் பகுதியில் கோடை சாகுபடி பணி மும்முரம்

நீடாமங்கலம், ஏப். 17: நீடாமங்கலம் பகுதிகளில் கோடை சாகுபடி பணி மும்முரமாக நடைபெறுகிறது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி அறுவடை முடிந்து பருத்திக்காட்டை, செருமங்கலம், சமுதாயக்கரை, மடப்புரம், மேலாளவந்தசேரி, பெரம்பூர், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்து வருகின்றனர்.பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோடை சாகுபடி தொடங்கி தற்போது களை எடுப்பு, உரம் தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பின் தங்கிய கோடை சாகுபடி நடவு பணி நடைபெறுகிறது.


Tags : area ,Neemamangalam ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...