×

தொட்டபெட்டா சாலை மூடப்பட்டதால் தேயிலை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி : தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் 4 மாதங்களுக்கு பின் கடந்த 23ம் தேதி முதல் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லங்கள் திறக்கப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே, ஊட்டி – கோத்தகிரி சாலையில் தேயிலை பூங்கா அமைந்துள்ள நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இங்கு செல்வதில்லை. இதனால் அருகாமையில் உள்ள தேயிலை பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இருப்பினும் புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது….

The post தொட்டபெட்டா சாலை மூடப்பட்டதால் தேயிலை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Totapetta Road ,Nilgiri ,second wave of Corona ,Tamil Nadu ,Tea Park ,Dinakaran ,
× RELATED கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்