×

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம்

தர்மபுரி, ஏப்.16: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி வீடு,வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். வேட்பாளர் கோவிந்தசாமி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று தர்மபுரி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் கோவிந்தசாமி பேசுகையில், ‘பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடுபடுவேன். தொகுதி மக்களுக்கு அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, இரட்டை இலை சின்னத்திற்கு  வாக்களியுங்கள்,’ என்று கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதரவு திரட்டினர்.

Tags : Pappirippatti ,candidate campaign ,AIADMK ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி