×

கரூர் நகரம், தாந்தோணி ஒன்றியத்தில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு

கரூர், ஏப்.16: கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ்வேட்பாளர் ஜோதிமணி கரூர் நகரம், தாந்தோணி ஒன்றியத்தில் வாக்குசேகரித்தார்.  கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இதில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன், உள்ளிட்டதிமுகமற்றும் காங்கிரஸ், மார்க்சிய கம்யூ, இந்திய கம்யூ. மதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர். வாக்குசேகரித்து ஜோதிமணிபேசுகையில், நாடுமுழுவதும் மோடிக்கு எதிரான அலைவீசுகிறது. கடந்த 23ஆண்டுகளுக்கும்மேலாக நான் கட்சிபணியாற்றுகிறேன். பலமாநிலங்களில் ராகுல்காந்தி தலைமையில் பணியாற்றியிருக்கிறேன். அவரை என்னால் சந்திக்க முடியும். நான்சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணியாற்றத்தான் வந்திருக்கிறேன். தொகுதிக்குஎன்னால் திட்டங்களை கொண்டுவரமுடியும். கடந்த 10ஆண்டாக தொடர்ந்து எம்பியாக இருந்தவர் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

எம்பி தொகுதியில் ஒருகிராமத்தை தத்து எடுத்தார். அதற்குகூடி நிதி தரவில்லை என அவரே கூறினார். மத்தியஅரசின் சிறப்பு திட்டங்கள்ஒன்றுகூட தொகுதிக்குவரவில்லை. கடந்த ஆண்டு பாஜகஆட்சியில் ரூ100ல் இருந்து ரூ 300ஆக கேபிள்கட்டணம்உயர்ந்துவிட்டது. சிலிண்டர் ரூ.400ல் இருந்து ரூ.1000ஆகிவிட்டது. டீசல் ரூ.40ல் இருந்து ரூ.70, பெட்ரோல் ரூ.55ல் இருந்து 80, டோல்கேட் ரூ30ல் இருந்து ரூ.90, என விலைவாசி உயர்ந்துவிட்டது.
ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் நலிந்துபோய்விட்டது. தப்பித்தவறி மீண்டும் இவர்கள் வந்தால் விலைவாசி எங்கே போய்முடியும் என தெரியாது. தொகுதிக்கு நலத்திட்டங்களும்கிடையாது.விலைவாசியும உயர்ந்துவிடும். எனவே சிந்தித்துப்பார்த்து வாக்களிக்கவேண்டும் என்றார்.


Tags : town ,Karur ,Jothimani ,alliance ,DMK ,Dantor Union Congress ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு