×

கரூர், கோவை சாலையில் டிராபிக் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்

 

கரூர், மே 24: கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மனோகரா கார்னர் பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் வரை கோவை சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவை உள்ளன. இந்த சாலையில் வையாபுரி நகர், 80 அடி ரோடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கான கட்ரோடுகள் பிரிகிறது.

இந்த கட்ரோடுகளின் வழியாகவும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. பிரதான கோவை சாலையில் செல்லும் வாகனங்கள், கட்ரோடுகளில் பிரிந்து செல்வதற்காக சாலையை கடக்கும் போது, சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு, வாகன ஓட்டிகளின் கவனக் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், பிரிவு ரோடுகளில் டிராபிக் போலீசார் பணியில் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில், கட்ரோடுகளில் வாகனங்கள் பிரிந்து செல்லும் வகையில் டிராபிக் போலீசார்களை பணியில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு இதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

The post கரூர், கோவை சாலையில் டிராபிக் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Coimbatore ,Coimbatore road ,Manokara ,Thirukambulyur ,Vayapuri Nagar ,Coimbatore Road Traffic Police ,Dinakaran ,
× RELATED தடுப்பு சுவரோரம் படிந்துள்ள மணற்பரப்பு அகற்ற கோரிக்கை