×

அரசம்பாளையம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழா

க.பரமத்தி, மே 26: க.பரமத்தி அருகே அரசம்பாளையம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி அரசம்பாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.திருவிழாவைமுன்னிட்டு கடந்த 23ம் தேதி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் முக்கிய நிழல்வான கிடா வெட்டு நிகழ்ச்சியும் தொடர்ந்து பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post அரசம்பாளையம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Arashampalayam Colony Maduraiveeran Temple Festival ,Paramathi ,Maduraiveeran temple festival ,Arashampalayam Colony ,K. Paramathi ,Union ,Kuppam Panchayat Arashampalayam ,Colony Street Maduraiveeran ,Pommiyammal ,Villiayammal ,Karuppannasamy ,
× RELATED க.பரமத்தி அருகே மிதமான மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி