×

பெரம்பலூரில் அம்பேத்கர் பிறந்த நாள் ெகாண்டாட்டம்


பெரம்பலூர், ஏப். 16: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் உள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்டில் அம்பேத்கர் சிலைக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாநில செயலாளர் வீரசெங்கோலன் தலைமையில் பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தேமுதிக சார்பில் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக வேட்பாளர் சிவபதியுடன் வந்து பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாநில செயலாளர் மணிமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Ambedkar ,Perambalur ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...