×

அரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

அரூர், ஏப்.14: அரூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரூர் சட்டமன்றத்திற்கு திமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகுமார் எஸ்.பட்டி, வாதாப்பட்டி, கொங்கவேம்பு, கூத்தாடிப்பட்டி, கருப்பிலிப்பட்டி, கொங்கம், கருத்தம்பட்டி, பாரதிபுரம், கோரிமேடு, பழையகொங்கம், எச்.ஈச்சம்பாடி, மத்தியம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கருத்தம்பட்டி பழையூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சாமிகண்ணு,  செந்தாமரைகண்ணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், ராஜசேகர், மகாலிங்கம், ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூவேந்தன், கோவிந்தராஜ், வேடியப்பன், துரை, கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் மல்லிகா, தங்கராஜ் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.வாக்கு சேகரிப்பின் போது, கிராம பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை கட்டயாம் தீர்த்து வைப்பதாகவும், சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தருவதாகவும், முதியோர் உதவித்தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு, முதியோர் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

Tags : Krishnakumar ,DMK ,constituency ,Arar Assembly ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்