×

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன் 28 கிராமங்களில் தீவிர பிரசாரம்

தர்மபுரி, ஏப்.14: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜேந்திரன் 28 கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். வேட்பாளர் ராஜேந்திரன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை தர்மபுரி வடக்கு ஒன்றியங்களான பத்திரெட்டிப்பட்டி, சொரக்காப்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, தொப்பக்கரை, சிக்கம்பட்டி, முத்தம்பட்டி, மஞ்சநாயக் கனசந்தா, வேப்பமரத்தூர், கருங்காநல்லூர், ராமதாஸ் சண்டா, என்.எஸ்.ரெட்டியூர், வத்தல்மலை, முக்கல்நாயக்கன்பட்டி, செட்டிக்கரை, நீலாபுரம், சோனகொட்டாய், நடுப்பட்டி, மூக்கனூர், எம்.ஒட்டப்பட்டி உள்ளிட்ட 28 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது வேட்பாளர் ராஜேந்திரன் பேசுகையில், ‘தேர்தலில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்தால், தரமான சாலை வசதி ஏற்படுத்தி தருவேன். விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்ய பாடுபடுவேன். பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் தலையீடு இல்லாமல், பொதுத்துறை நிறுவனமான தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,’ என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Tags : Rajendran ,constituency ,villages ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...