×

முசிறி தொகுதியில் கோரைபாய் தொழிற்சாலை அமைத்து ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அதிமுக வேட்பாளர் சிவபதி தேர்தல் பிரசாரம்

தா.பேட்டை, ஏப்.12:   பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளர் சிவபதி, முசிறி ஒன்றியத்தில் நேற்று வாக்குகள் சேகரித்தார்.முசிறி அடுத்துள்ள  உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், சாலப்பட்டி, திரணியாம்பட்டி,  தொட்டியப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்று  வாக்குகள் சேகரித்தார். அப்போது வேட்பாளர் சிவபதி பேசும்போது, முசிறி காவிரி ஆற்றில் கொரம்பு அமைக்கப்படும். கோதாவரி நதியை காவிரியுடன்  இணைக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். முசிறியில் கோரைபாய்  தொழிற்சாலைகள் அரசு சார்பில் அமைக்கப்பட்டு ஏழை தொழிலாளர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

இதில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி, முசிறி எம்எல்ஏ  செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.
தொடர்ந்து துறையூர் தொகுதிக்குட்பட்ட வன்னாடு, தென்புறநாடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து நடிகர் சரவணன் திறந்த வேனில் வீதி வீதியாக சென்றுவாக்கு சேகரித்தார்.



Tags : Sivapati ,constituency ,Murasiri ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...