×

100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

தா.பழூர், ஏப். 12: மக்களவை தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் நேர்மையாக மக்கள் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பேரணியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், நேர்மையாக வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி மாற்றுத்திறனாளிகள் வலம் வந்தனர்.

அப்போது கடைவீதியில் நின்று கொண்டிருந்த பொமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷாகீர் உசேன், பஞ்சாபிகேசன், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சங்க தலைவர் பழனியாண்டி, செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED வாக்கு எண்ணும் பணி கண்காணிப்பு...