×

அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதியில் 5.11 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் பணி துவக்கம்

அரியலூர், ஏப். 12: சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 5,11,359 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் பணி துவங்கியது. இந்த பணியில் 587 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 5,11,359 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 587 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்வர்.இப்புகைப்பட வாக்காளர் சீட்டினை அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது.

வாக்குச்சாவடியில் வாக்களிக்க செல்லும்போது புகைப்பட வாக்காளர் சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி புத்தகம், அஞ்சலக கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளாரால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur ,Booth Chilip ,voters ,Jayankondam ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்