தர்மபுரி, ஏப்.12: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வக்கீல் மணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக வேட்பாளர் வக்கீல் மணி போட்டியிடுகிறார். இவர் சட்டமன்ற தொகுதி முழுவதும், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள கடத்தூர், சில்லாரஅள்ளி, பில்பருத்தி, அய்யம்பட்டி, பசுவாபுரம், கருத்தானூர், வேப்பிலைப்பட்டி, அதிகாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தெரு தெருவாக சென்று, திமுக ஆட்சியின் போது செய்த சாதனைகளை எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, திமுக வேட்பாளர் வக்கீல் மணி பேசுகையில், ‘திமுக ஆட்சியின் போது விவசாய கடன் ₹7ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தவர் தலைவர் கருணாநிதி. மேலும், பொதுமக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இலவச கலர் டிவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு நன்மைகள் செய்த திமுக ஆட்சி மீண்டும் மலர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய ேவண்டும்,’ என்றார்.