×

கலெக்டர் பங்களா அருகே காலி குடங்களுடன் திரண்ட பெண்கள்

தர்மபுரி, ஏப்.12 தர்மபுரி கலெக்டர்  பங்களா அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தேவரசம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீரும்,  ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரும் வழங்கப்படவில்லை. எனவே  முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 8 மணியளவில் காலி குடங்களுடன் கலெக்டர் பங்களா அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான்கோட்டை ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இரண்டொரு நாட்களில் குடிநீர் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பு பெண்கள் கலைந்து சென்றனர். மேலும், குடிநீர் கிடைக்காவில்லை என்றால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைத்து தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Collector ,Bangla ,
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...