×

சங்ககிரியில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரசாரம்

சேலம், ஏப். 12: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நாளை (13ம்தேதி) இரவு 7மணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். பழைய பேருந்து நிலையம் அருகில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சங்ககிரி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், பேரூர், ஊராட்சி, வார்டு செயலாளர்கள், அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தோழமை கட்சிகளின் மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Stalin ,DMK ,Sangakkara ,
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...