×

உறுவையாறு சாய்பாபா கோயிலில் நாளை ராமநவமி சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுச்சேரி, ஏப். 12: புதுவை உறுவையாறு ஷீரடி சாய்பாபா நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் ஸ்ரீபோலோ சாய்பாபா சாரிடபுள் ட்ரஸ்ட் சார்பில் ஸ்ரீசீரடி சாய்நாதரின் பிறந்த நாளை (ராமநவமி) முன்னிட்டு நாளை (13ம் தேதி) சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 8 மணிக்கு சத்சரித பாராயணம், 9 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மேத்தா தட்சணாமூர்த்தி ஹோமம், திரிமூர்த்தி ஸ்வரூப சாயிநாதர் அனுக்ரக யாகம், 11.15க்கு சாயி நாம சங்கீர்த்தனம் மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை ஆரத்தி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆரத்தி, 6.30க்கு சாவடி பல்லக்கு ஊர்வலம், இரவு 8.30 மணிக்கு ஆரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும், நாளை முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீபோலோ சாய்பாபா சாரிடபுள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : events ,Sai Baba ,
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!