×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஏப்.11: சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் பண்டிகையையொட்டி, புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்தது.
நாமக்கல்  மாவட்டம் புதன்சந்தையில், புதன்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது  வழக்கம். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம்,  எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவுவதால், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து  அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சேந்தமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் மாரியம்மன் பண்டிகை நடந்து வருவதால், ஆடுகள் விலை  உயர்ந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு ₹4,900க்கு  விற்பனையானது. இந்த வாரம் ₹5 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த வாரம் ₹4 ஆயிரத்துக்கு  விற்பனையான ஆடு, இந்த வாரம் ₹4,200க்கு ஆயிரத்துக்கு விற்பனையானது. பிறந்து  ஒருமாதமே ஆன பெண்குட்டி ஆடு ₹900க்கும், கிடா குட்டி ₹1,000க்கும்  விற்பனையானது.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு