×

பறவைகள் சரணாலய ஏரி கரை கட்டும் பணி வாய்க்கால் தூர்ந்து விவசாய பாசனம் தடைபடும் அவலம் உதயமார்த்தாண்டபுர விவசாயிகள் கவலை

முத்துப்பேட்டை, ஏப்.11: முத்துப்பேட்டை அடுத்த  உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய ஏரியின் கரைகட்டும் பணியின்போது   பாசன வாய்க்காலின் அகலத்தை தூர்த்து மண் கொட்டப்பட்டு வருகிறது. நாளடைவில் வாய்க்கால் தூர்ந்து விவசாய பாசனம் தடைபடும் அவலம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.முத்துப்பேட்டை அருகே  உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் முக்கிய மைய பகுதியில் 111 ஏக்கர் பரப்பளவு  கொண்ட  பாசன ஏரியுடன்  உள்ளது. பல ஆண்டுகளாக  சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களுக்கு மிகப்பெரிய பாசனத்தை பெற்று தந்த  இந்த ஏரியை தற்போது வனத்துறையினர் கைப்பற்றி பறவைகள் சரணாலயமாக உருவாக்கி பராமரித்து  வருகின்றனர்.

வருடந்தோறும் மழைக்காலங்களில் நீர் நிரம்பியிருக்கும் இந்த ஏரிக்கு லட்சக்கணக்கான நீர் பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன. இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யும். இந்த பறவைகளை காண பலர் இங்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர்.அதனால் இந்த ஏரிப்பகுதியை அரசு சரணாலயமாக அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பணிகளுக்கு பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏரியை சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் வனத்துறை அலட்சியபடுத்துவதால் ஏரி வறண்டு திடல்போல் காட்சி அளித்தது. இதனால்  பறவைகள் வரத்தும் குறைந்துவிட்டது.  இந்நிலையில் அரிய வகை பறவைகள் வருகையால் இந்த ஏரி நீரை இறைத்து சாகுபடிக்கும்  பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. நீர் இறைக்க வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் இப்பகுதி விவசாயம் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தேவையான நீர்ஆதாரத்தை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை முழுமையாக தூர்வாரித்தர வேண்டும். ஏரி நீரை சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென இப்பகுதி மக்களும் விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த நவம்பர் 15ம்தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்திற்கு சரணாலயத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் அரிய வகை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் சரணாலயம் பார்க்க சின்னாபின்னமாகி உருக்குலைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை சீரமைக்க தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில் சரணாலயதை சுற்றியும் ஏரியை சுற்றியும் மணல் நிரப்பி கரையை உயர்த்தி கரை கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் இந்த ஏரிக்கு நீர் வரத்தை பெற்றுத்தரும் பாசன வாய்க்கால்களில் பாதியளவு இடத்தில் மணலை கொட்டி கரையை உயர்த்தி  கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் நாளடைவில் பாசன வாய்க்கால் தூர்ந்து ஏரிக்கு தண்ணீர் வருவது தடைப்படும் சூழல்நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல் இந்த ஏரி மூலம் விவசாயத்திற்கு பாசனத்தை பெறுவதும் தடைப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தற்போது ஏரியை சுற்றி கரையை கட்டப்படும் பணியை நிறுத்தி பாசன வாய்க்காலை பாதிக்காத வகையில் பணியை மேற்கொள்ளவேண்டும். தற்போது பாசன வாய்க்காலில் கரையை உயர்த்துவதற்காக கொட்டப்பட்ட மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bird Sanctuary Lake Shore Work Draining Diligating Agricultural Irrigation Damage Poor Udayamardhana ,
× RELATED திருவாரூர் கோடை மழைக்கு என்ன சாகுபடி...