×

திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

 

வலங்கைமான், மே 22: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனம் கிளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் மகேந்திரன் (48) இவர் இரவு கோவிந்தகுடிக்கு சென்று விட்டு வலங்கைமான் பாபநாசம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். இனாம் கிளியூர் மெயின் ரோட்டில் செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார் .

அதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகேந்திரனை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Valangaiman ,Valangaiman ,Mahendran ,Kleur Keezatheru ,Valangaiman, Tiruvarur district ,Govindagudi ,Papanasam Road ,Valangaiman, Tiruvarur ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் தொழுவூர் அரசு...