×

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை

திருவாரூர், மே 23: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் சாரல் மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 105 டிகிரி முதல் 115 டிகரி வரையில் கடந்த 2 மாத காலமாக வெயில் சுட்டெரித்து வந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் 105 டிகிரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இதன் காரணமாக பொது மக்கள், கல்லு£ரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வெயில் காரணமாக மரம், செடி, கொடிகளின் இலைகளும் உதிர்ந்து காய்ந்து போகும் நிலை ஏற்ப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கும் மேய்சலுக்கு புல் கிடைக்காமல் தவித்து வந்தன.

இந்நிலையில் வெப்ப சலணம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் கடந்த 8ந் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் ஓரளவு வெப்பம் குறைந்ததையடுத்து பொது மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்த நிலையில் குளிர்ந்த காற்றும் வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த தொடர்மழை காரணமாக காய்ந்துபோன மரங்களில் இலை துளிர்த்து வருவதுடன் ஆங்காங்கே புல்வெளிகளும் முளைத்துள்ளதால் இதன் காரணமாக மேய்சலுக்கு இடமின்றி தவித்த கால்நடைகளுக்கும் இந்த மழையானது பயனுள்ளதாக இருப்பது குறிப்பிடதக்கது.

The post திருவாரூர் மாவட்டத்தில் தொடர் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு