×

பொய்யாகுளம் பகுதியில் என்ஆர் காங். தீவிர பிரசாரம்

புதுச்சேரி, ஏப். 11: ஜக்கு சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பொய்யாகுளம் பகுதியில் என்ஆர் காங்கிரசார் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ரங்கசாமியின் அக்காள் மகள் நெடுஞ்செழியன் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த்துடன் இணைந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.வாக்குபதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், நேற்று பொய்யாகுளம், பாரி வீதி, முல்லா வீதி மற்றும் வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஜக்கு சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.வேட்பாளர் நெடுஞ்செழியனுடன், அசோக் ஆனந்த் மற்றும் அதிமுக, பாமக, நிர்வாகிகள், தொண்டர்கள், 50க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட தங்களை ஆதரிக்க வேண்டுமென என்ஆர் காங்கிரசார் கேட்டுக் கொண்டனர்.


Tags : area ,campaign ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...