×

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் இ-சேவை மையத்தில் கூடுதலாக பணம் வசூல்

நெய்வேலி, ஏப். 11: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை மையமானது வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு சொசைட்டிகளில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், வாரிசு, விதவை, கலப்பு திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் விண்ணப்ப கட்டணமாக அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 60 மட்டுமே சரியாக வசூல் செய்கிறார்கள். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் கணினி மையங்களில் உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளில் உள்ளவர்கள் இ- சேவை மையம் என கூறிக்கொண்டு அங்கு வரும் அப்பாவி பொதுமக்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்கின்றனர்.

 மேலும் சான்றிதழ் கேட்பவர்களுக்கு தனி கட்டணம் என்று பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களே வாங்கி கொடுப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்று மக்களை  ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : center ,Neyveli Township ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...