×

ஆள்காட்டி விரலில் வைக்கும் மை, பூத் சிலிப் 652 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி மும்முரம்

பெரம்பலூர்,ஏப்.10: ஆள்காட்டி விரலில் வைக்கும் மை, அரக்கு, பூத்சிலிப் உள் ளிட்ட 38வகையான வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் பெரம்பலூர் மாவட் டத்திலுள்ள 652 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும்பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தேர்தல் நடத்தும்அலுவலரும், கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பும்பணிகள்  மும்முரமாக நடந்துவருகிறது. இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்கள் மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தி லுள்ள குறிப்பிட்ட சில கிராமங்களைக் கொண்டுள்ள பெரம்பலூர் சட்டமன்றத் தொகு தியில் 332 வாக்குச்சாவடிகள் உள்ளன. குன்னம், செந்துறை ஒன்றியங்கள் மற்றும் ஆலத்தூர் ஒன்றியத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களைச் கொண்டுள்ள குன்னம் சட்ட மன்றத்தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தத்தில் பெரம்பலூர் மாவ ட்டத் தேர்தல்நடத்தும் அலுவலரான கலெக்டரின் கட்டுப்பாட்டில் 652 வாக்குச்சாவடி கள் உள்ளன.

இந்த 652 வாக்குச் சாவடிகளுக்கும் தேர்தல் நாளின்போது வாக்குப்பதிவுக்குத் தேவையான மை, பூத்சிலிப் உள்ளிட்ட 38வகையான பொருட்கள் அனுப்பிவைக்கும் பணிகள் பெரம்பலூர்  கலெக்டர் அலுவலகத்திலிருந்து நடைபெற்று வருகி றது. இதன்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதை மறைவாக இருக்கும்படி செய்யக்கூடிய மறைவுஅட்டை, வாக்காளர் ஆள்காட்டி விரல்களில் வைக்கக்கூடிய மை, மெழுகுவர்த்தி, அரக்கு, ஸ்டாப்லர் பின், ஊசி, நூல், தீப்பெட்டி, பசை, இங்க், ஸ்டாம்பேட் டப்பா, வெள்ளைத்தாள், சீல்வைக்கும் துணி, பூத்சிலிப் என 38வகையான பொருட்கள் அ்டங்கிய பைகள் பேக்கிங்செய்யப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர்சட்டமன்றத் தொகுதியிலுள்ள 332வாக்குச்சாவடிகளுக்கு அனுப் பும் பணிகள் முடிவடைந்த நிலையில், குன்னம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கும்பணிகள் மும்முரமாக  நடந்துவருகின்றன.

Tags : Booth Chilip ,polling stations ,
× RELATED தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்...