×

முதியவர் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரி, ஏப்.10: தர்மபுரி மதிகோண்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (70). விவசாயி. இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 18ம் தேதி 4 ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனை முன்பு சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் மோதியது. இதில் காயமடைந்த அவரை, மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி சாமிநாதன் இறந்தார். அவரது சடலத்தை வீட்டிற்கு அருகே புதைத்தனர்.

இந்நிலையில் சாமிநாதன் குடும்பத்தினர், மதிகோன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதில் சாமிநாதன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன் படி நேற்று போலீசார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. டாக்டர் மதன்ராஜ் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். ஆய்வின் அறிக்கை வந்த பின்னரே, சாமிநாதன் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Dharmapuri ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது