×

கொடைக்கானல் வாக்கச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கொடைக்கானல், ஏப். 10: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் சுதேஷ்குமார் முக்தா கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு  மேற்கொண்டார். நகராட்சி நடுநிலைப் பள்ளி, புனித ஜான் மெட்ரிக் பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார் வில்சன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்தனர். தொடர்ந்து அவர் சாலை வசதி இல்லாத  வெள்ளகவி, சின்னூர் , பெரியூர் போன்ற மலைக்கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளை கொண்டு செல்வது குறித்தும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக போதிய காவலர்களை நியமிப்பது குறித்தும்  அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

Tags : voting ,Kodaikanal ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...