×

பவானிசாகர் அருகே காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்

ஈரோடு, ஏப். 10:  ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 10 மாதத்திற்கு பூங்கா திறக்கப்படாது. ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காக கடந்த 1927ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் வ.உ.சி.பூங்கா துவங்கப்பட்டது.
இந்த பூங்காவில் புல்வெளியில் இந்தியா வரைபடம், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு ரயில், சிங்கம், புலி, மான்கள், மயில், அரியவகை குரங்கினங்கள் அடங்கிய வனவிலங்குகள் சரணாலயமும் அமைக்கப்பட்டிருந்து. இந்த பூங்காவிற்கு தினசரி பொதுமக்கள் வந்து சென்றனர். ஆனால் நாளடைவில் பூங்காவை முறையாக பராமரிக்காத நிலையில் இங்கிருந்த விலங்குகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. மேலும் சிறுவர் ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தது.  மேலும் பூங்காவில் இருந்த செயற்கை நீரூற்றும் பயன்பாடற்ற நிலைக்கு போனது. இந்த பூங்காவின் அருகிலேயே சிறுவர்களுக்கான அறிவியல் பூங்காவும் உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்களும் உடைந்த நிலையில் உள்ளது.

பூங்காவில் பொழுதுபோக்கிற்கான எந்த வசதிகளும் இல்லாத நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி போனது. இதை தொடர்ந்து இந்த பூங்காவை சீரமைத்து பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தற்போது பூங்காவை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.6.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து பூங்கா சீரமைப்பு பணிக்காக டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் கலையரசனுக்கு சொந்தமான செந்தூர் கன்ஸ்ட்ரக்சன் எடுத்துள்ளது. கடந்த 31ம் தேதியுடன் பூங்காவிற்காக டெண்டர் காலம் முடிவடைந்த நிலையில் பூங்காவிற்கு பூட்டு போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிறுவர் மற்றும் வ.உ.சி.பூங்கா பூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையாக அறிவிப்பு வெளியிடாத நிலையில் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வ.உ.சி.பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.6.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
தற்போது இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரயில், புட்கோர்ட், மூலிகை செடிகள், அழகிய மலர் தோட்டங்கள், நடைபாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் போன்றவைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். பூங்கா சீரமைப்பு பணிகளுக்காக 10 மாதங்கள் ஒப்பந்த காலம் உள்ள நிலையில் அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு பூங்காவிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 10 மாதத்திற்கு பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாது என தெரிவித்தனர்.

Tags : Bhavanisagar ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பவானிசாகர் அணையின் மீது விழிப்புணர்வு பேனர்